கோவை: கோவையில் வழிப்பறி செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமத் ஜாகீர் (29). இவர் கோவை ரத்தினபுரி பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்.
பின்னர் அவர் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியது. அவர் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றது.
இதனால், அதிர்ச்சியடைந்த முகமத் ஜாகீர் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், பணம் பறித்து தப்பி சென்ற 4 பேரை தேடி வருகின்றனர்.