கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முறிந்த மரம்- ஆட்டோ சேதம்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதமடைந்தது.

கோவை, டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ சேதமடைந்தது.

Advertisement

கோவை டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி பிரதான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், வளாகத்திற்குள் இருந்த பெரிய மரம் ஒன்றின் ராட்சதக் கிளைகள் திடீரென வேரோடு முறிந்து வெளியே சாலையில் விழுந்தது.

​அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்று, மரத்தின் அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. மரம் விழும் சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரும், அருகில் இருந்த பொதுமக்களும் உடனடியாகச் விலகி ஓடியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 5வது வெள்ளியுடன் சேர்ந்து வரும் ஆடிப்பூரம்; பெண்கள் வாங்க வேண்டிய 11 மங்களப் பொருட்கள்…!

கோவை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 5வது வெள்ளிக்கிழமையான இன்று, ஆடிப்பூரமும் சேர்ந்து வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் தவறாமல் 11 பொருட்களை வாங்கி வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்....

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...