உச்சத்தை தொட்ட விஜய்… அரசியல் முதல் படி எடுத்து வைத்த வாரிசு நடிகர்; குறுக்கே வரும் SK!

தற்போது இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய அரசியல் கட்சி தலைவராக விஜய் பார்க்கப்பட்டு வருகிறார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததால் யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Advertisement

ஆனால், நான் தான் எம்ஜிஆரின் அடுத்த வாரிசு என்பதை நிருபிக்கும் விதமாக, அதிமுக வசம் இருந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதன்மூலம், சட்டசபையில் தவெகவின் பலம் 107ல் இருந்து 109ஆக அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தலை விட, இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகமே கூர்ந்து கவனித்து வந்தது.

1960 -70 காலகட்டங்களில் எம்ஜிஆருக்கு மக்களிடைய எப்படியொரு வரவேற்பு இருந்ததோ, அதேபோன்ற வரவேற்பு தான் தற்போது விஜய்க்கும் உருவாகியுள்ளது.

Advertisement

விஜய்யின் வெற்றிக்கு திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் மீதான அதிருப்தியும், விரக்தியும் ஒரு காரணமாக இருந்தாலும், Gen Z இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவு ஓட்டுப்போடச் செய்த விஜய்யின் ஈர்ப்பும் தான். குறிப்பாக, பெண் வாக்காளர்களின் ஓட்டுக்களும் விஜய்க்கு வலுசேர்த்தன. இதன் விளைவாக திமுக மற்றும் அதிமுக ஆட்டம் கண்டுள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களும், இளம் பெண்களும் அரசியலில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர்.

நடிகர் விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது. இதில், முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். திருவள்ளூரில் நடந்த தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் மூலம், முதல்முறையாக அவரது அரசியல் ஆசை வெளிப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், “இத்தனை பேர் இங்கு ஒன்றாக கூடியிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமைக்கும் ஒரு சக்தி உள்ளது. அந்த சக்திக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும்,” என்று அரசியல் என்ட்ரிக்கு அடித்தளம் இடுவது போன்று பட்டாசாக அவர் வெடித்து தள்ளியிருந்தார்.

Advertisement

விஜய்யும் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தற்போது தனுஷூம் அதே பாணியை கையில் எடுத்து இருக்கிறார். தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை தொடர்ந்து பிரமாண்டமாக நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்திலும், நமது கூட்டத்திற்கு ஒரு நோக்கம் இருப்பதாக அவர் பேசியிருந்தார். தன்னுடைய பிறந்த நாளன்றும் தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்தார். மேலும், நற்பணி மன்றத்தை தொகுதி வாரியாக வலுப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். சூட்டிங் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை வரவழைத்து தன்னுடைய மவுசை காட்டி வருகிறார் தனுஷ்.

தனுஷின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக எழுச்சிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் தனுஷ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2031 அல்லது 2036 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து நடிகர் தனுஷ் தற்போது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்த சூழலில், தனுஷூக்கு போட்டியாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து, தனது செல்வாக்கை வெளிப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 2012ல் மெரீனா படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்த அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் அமரன் போன்ற படங்களினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

தற்போது, அவர் தன்னுடைய நற்பணி மன்றத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ‘புதிய நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பாங்க. நீங்கள் சினிமாவில் நீடிப்பீர்களா,’என்று தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் கேட்டதை மேடையில் சுட்டிக் காட்டி பேசினார். நான் மக்களால் உருவாக்கப்பட்டவன் என்று கூறி ரசிகர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தை அதிரச் செய்தார். இதனால், அரசியல் எண்ணம் இவருக்கும் துளிர் விடுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சினிமாவில் இருந்து வந்த விஜய்க்கே இவ்வளவு வரவேற்பு இருக்கும் போது, நமக்கு கிடைக்காதா? என்ற எண்ணம் தான் இத்தனைக்கும் காரணமாக போனது.

இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாகவே விஜய் ஆட்சிக்கு வந்ததாக, அரசியல் ஜாம்பவான்களாக திமுக, அதிமுக குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, தனுஷூம், சிவகார்த்திகேயனும் தங்களின் சமூக வலைதள இருப்பைக் காட்டிக் கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்காக, இருவரையும் புரமோட் செய்வதற்காகவே, தனி ஐடி விங்குகள் செயல்பட்டு வருகின்றனவாம். அதுமட்டுமல்லாமல், 100க்கும் மேற்பட்ட பெய்டு யூடியூப்பர்களும், இன்ஸ்டா இன்ப்ளுயன்ஸர்களும், இவர்களை வாழ்த்தையும், விளம்பரப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக பேச்சுக்கள் எழுகின்றன.

ஆனால், விஜய் தொகுதி வாரியாக 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செய்து, பல ஆண்டுகளாக அரசியல் வருகைக்கான அடித்தளத்தை மட்டுமே போட்டார். அதுமட்டுமில்லாமல், தனுஷ், சிவகார்த்திகேயனை தாண்டி, நடிகர் விஜய்க்கு சினிமாவில் மக்கள் மத்தியில் தனி இடம் இருந்தது. இதனால், விஜய்க்கு நிகராக இவர்கள் வரவேண்டும் என்று நினைப்பது கொஞ்சம் கடினமான செயல்.

இருப்பினும், அரசியலில் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளும், அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக விஜய்யை நினைத்த மக்கள், விஜய்க்கு மாற்றாக வேறு ஒரு தலைவரை எதிர்பார்க்கக்கூடிய சூழலும் உருவாகலாம். எனவே, எதையும் இப்போதே கணித்திட முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம், சினிமாவில் இருந்து இன்னும் எத்தனை எம்ஜிஆர்கள் தான் உருவாவார்கள் என்று.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...