கோவை: கோவையில் 18ம் தேதி முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது.
காரமடையில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் இன்று 19-ஆம் தேதி காலை 6.30 மணி வரை பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில், காரமடை பகுதியில் அதிகபட்சமாக 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெரியநாயக்கன்பாளையத்தில் 96.00 மி.மீ., துடியலூரில் 85.20 மி.மீ. மற்றும் போகம்பட்டியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மதுக்கரையில் 49.6 மி.மீ., வடவள்ளியில் 32.8 மி.மீ., பிள்ளையார்பாளையத்தில் 31.6 மி.மீ., நாயக்கன்பாளையத்தில் 24 மி.மீ., சிக்கதாசம்பாளையத்தில் 24 மி.மீ. மற்றும் ஒத்தக்கால்மண்டபத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொண்டாமுத்தூரில் 15.60 மி.மீ., சர்க்கார் சாமக்குளத்தில் 13.20 மி.மீ., சோமனூரில் 13.20 மி.மீ. மற்றும் அன்னூரில் 10.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்ட நிலையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.






