பெரியார் அறிவுலகம் எந்த கட்சிக்கும் சார்ந்தது அல்ல- அமைச்சர் ராஜ்மோகன்…

கோவை: பெரியார் அறிவுலகம் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது என்றும் அது எந்த கட்சியையும் சார்ந்தது அல்ல என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரியார் அறிவுலகம் திட்டமிட்டபடி நாளை திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றும், அது கோவையின் அடையாளமாக மாறும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அதற்கான உரிமையைக் கொண்டாடுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்த பணம் திமுகவின் கணக்கிலிருந்து செலவிடப்பட்டதா? அது மக்களின் வரிப்பணம். திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் என எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல. மக்களுக்காகவே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து நல்ல திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதற்குப் பெரியார் அறிவுலகம் ஓர் எடுத்துக்காட்டு என்றார். திட்டமிட்டபடி நாளை நூலகம் திறக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.

பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement

பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement

மலைவாழ் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், அப்பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாகச் செயல்பட்டு வருவதாகவும், அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

டெட் தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், வாய்ப்பைத் தவறவிட்டவர்களை அழைத்துப் பேசி, அடுத்தகட்டக் கலந்தாய்வுகள் தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...