பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறியாமல் பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த ஏராளமான பொதுமக்கள், நுழைவாயிலில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை, கடந்த 16-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். நூலகம் மட்டுமின்றி, அறிவியல் சார்ந்த பல்வேறு சிறப்பு அம்சங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

இதனால், திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே பொதுமக்களிடையே பெரியார் அறிவுலகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், பெரியார் அறிவுலகமும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விடுமுறை குறித்த தகவல் தெரியாமல் இன்று பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட வந்த பொதுமக்கள் பலர், அது மூடப்பட்டிருந்ததைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பெரியார் அறிவுலகம் நூலகத் துறையின் கீழ் செயல்படுவதால், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் நூலகத்தின் வழக்கமான விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வழிபாடு…

கோவை: தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...