கோவை மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்: பெண்கள் டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

கோவை: கோவை மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு பெண்கள் டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் சார்பில் 2026–2027-ம் ஆண்டிற்கான வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே ஆடு அல்லது பிற கால்நடைகளை வைத்திருக்கக் கூடாது. மேலும், பயனாளியின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்கக் கூடாது.

Advertisement

கால்நடை பராமரிப்புத் துறையின் வாழ்வாதாரத் திட்டங்களில் ஏற்கனவே பயனடைந்தவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும்போது குறைந்தபட்சம் 40 சதவீத மாற்றுத்திறன் கொண்ட UDID சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

Advertisement

இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகளை இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதுடன், கால்நடை பராமரிப்புத் துறையின் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், நிலம் மற்றும் கால்நடை இல்லாததற்கான சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழக அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

குடிநீர் விநியோகம் முறையாக இல்லை- வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

கோவை: முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 2-வது வார்டில் உள்ள ஈஸ்வர் பார்க் மற்றும் டி.என்.பி. நகர்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...