குடிநீர் விநியோகம் முறையாக இல்லை- வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

கோவை: முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 2-வது வார்டில் உள்ள ஈஸ்வர் பார்க் மற்றும் டி.என்.பி. நகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பலமுறை வாட்ஸ்அப் மூலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இன்று அப்பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் துடியலூரில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது பெண்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சீரான குடிநீர் விநியோகிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. அருகில் உள்ள நகர் பகுதிகளில் வாரத்திற்கு மூன்று முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertisement

ஆனால், எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. அதுவும் குறைந்த வேகத்தில் வருவதால் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.

இதுகுறித்து பலமுறை வாட்ஸ்அப் மூலம் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மாநகராட்சி அதிகாரி நந்தகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டபோது, ‘எனது செல்போன் எண் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’ எனக் கேட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே, தங்கள் பகுதியில் உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...