கோவை மாவட்டத்தில் தொழில் பங்குதாரர்கள் தேர்வுக்கு ஆண்டு வருவாய் தகுதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக குறைப்பு TANFINET விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் தொழில் பங்குதாரர்கள் தேர்வுக்கு ஆண்டு வருவாய் தகுதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டு TANFINET விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) சார்பில், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவை வழங்குவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பங்குதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பதாரர்களின் நிதித் தகுதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாயாக குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகை ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரத்நெட் திட்டப் பணிகள் சுமார் 96 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், 37 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் இரண்டு தொழில் பங்குதாரர்களைத் தேர்வு செய்ய TANFINET திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் கோட்டத்தின் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு தனித்தனியாக பங்குதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisement

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் விண்ணப்பதாரர் செயல்படும் அல்லது முகவரி அமைந்துள்ள மாவட்டங்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் கண்ணாடி இழை கேபிள்கள் மற்றும் இணைய இணைப்பு சாதனங்களைப் பராமரித்தல், தடையற்ற இணைய சேவை வழங்குதல், சேவை பாதிப்புகளை விரைந்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://tanfinet.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் திரும்பப் பெறக்கூடிய, வட்டியில்லாத ரூ.25 ஆயிரம் விண்ணப்பப் பாதுகாப்புத் தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின்னர் பணி ஆணை வழங்கப்படும்.

ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், அதே வருவாய் கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நவம்பர் 10 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கல்லூரிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை – நவம்பர் 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது

கோவை: கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் நோக்கில், கல்லூரி சந்தை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களால்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...