2030-க்குள் ரேபிஸ் இல்லாத நகரமாக கோவையை உருவாக்க இலக்கு – தெருநாய்களுக்கு தீவிர தடுப்பூசி முகாம்!

கோவை: கோவையை ரேபிஸ் இல்லாத நகரமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியை 2030-ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களுக்கு தீவிரமாக வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1,11,074 நாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியின் 14, 98 மற்றும் 100-வது வார்டுகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 800 சமூக நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இந்தத் தடுப்பூசி முகாமின் முக்கிய நோக்கமாகும். இதற்காக மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் படிப்படியாக தடுப்பூசி முகாம்களை நடத்தி, அதிக எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

ரேபிஸ் நோய் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகளவில் 2030-ஆம் ஆண்டிற்குள் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் இலக்கை அடையும் வகையில், கோவை மாநகராட்சியும் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கோவையை ரேபிஸ் பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெள்ளலூரில் ரூ.69.20 கோடியில் பயோ-சிஎன்ஜி ஆலை கட்டுமானப் பணி – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு…

கோவை: வெள்ளலூரில் அமைய உள்ள பயோ சி.என்.ஜி ஆலை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) ஆலை...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...