வெள்ளலூரில் ரூ.69.20 கோடியில் பயோ-சிஎன்ஜி ஆலை கட்டுமானப் பணி – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு…

கோவை: வெள்ளலூரில் அமைய உள்ள பயோ சி.என்.ஜி ஆலை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) ஆலை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பயோ-சிஎன்ஜி ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கும் குப்பைகளிலிருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயனுள்ள எரிசக்தியாக மாற்றுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். சுமார் 236.35 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த மையத்தில், 80 நாய்கள் தங்குவதற்கான 8 கூண்டுகள், மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, மருந்துகள் அறை, இருப்பு அறை மற்றும் இரண்டு நிர்வாக அறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளன.

இரு திட்டங்களின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் முத்துசாமி, செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ரூ.18.21 கோடி மதிப்பில் 117 வளர்ச்சிப் பணிகள் – விரைவில் பணிகள் தொடங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.18.21 கோடி மதிப்பில் 117 வளர்ச்சிப் பணிகள் தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் சாலை, பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...