கோவை: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இரண்டு பெண் தளபதிகளை கொண்டு தாக்கிய நிகழ்வை நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் கொண்டாட வேண்டும் என பிரபல தொழிலதிபரும் மாட்டின் அறக்கட்டளை தலைவருமான லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட லீமா ரோஸ் ஸ்மார்டின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதி சுவிட்சர்லாந்து போன்ற ஒரு அழகான பிரதேசம். அந்த பகுதியில் பெண்களின் கண் முன்பாகவே அவர்களது கணவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதேபோல் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் விதவையாகினர். பயங்கரவாத தாக்குதலில் விதவையான பெண்களை கௌரவிக்கும் வகையில் தான் தற்பொழுது நடந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு பெண் கர்னல்களை வைத்து 25 நிமிடங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தையும் பிரதமர் நரேந்திர மோடியும் அனைவரும் பாராட்ட வேண்டும்.
இந்த சம்பவம் இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணும் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. அனைவருக்கும் பெருமை தரத்தக்க நிகழ்வு. என்றார்.