போலீஸ் விசாரணையால் ‘கிலி’… கோவையில் திருடிய ஆடுகளை மீண்டும் கொண்டுவந்த திருடர்கள்!

கோவை: கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடிய ஆடுகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளது ஆடு திருடும் கும்பல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர் 55. இவருக்கு சொந்தமாக வெள்ளிப்பாளையம் அருகே தோட்டம் உள்ளது. அங்கு செல்வி நாட்டுக்கோழிகள் மற்றும் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

இதனிடையே கடந்த வாரம் 2 ஆடுகளும் காணாமல் போனது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 4 இளைஞர்கள் 2 பைக்குகளில் வந்து நோட்டமிட்டது தெரியவந்தது.

தங்களைப் பற்றி போலீசார் தீவிரமாக விசாரிப்பதை அறிந்த ஆடு திருட்டு கும்பல், திருடிய 2 ஆடுகளையும் மீண்டும் அதே இடத்தில் நேற்று காலை விட்டு சென்றுள்ளனர்.

Advertisement

இதனிடையே ஆடு திருடும் கும்பல்கள் குறித்து போலீசார் தோட்டத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறுகையில்,” நகை, பணம் திருட்டு போல் கால்நடைகளை திருடி விற்பனை செய்வதும் நடைபெறுகிறது. ஆடுகள் தான் முக்கிய டார்கெட்டாக உள்ளது. ஸ்கூட்டர் அல்லது கார்களில் எளிதில் ஆடுகளை கடத்த முடியும் என்பதால் ஆடுகள் அதிக அளவில் கூறி வைக்கப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே புகார் அளிக்க வேண்டும்” என்றனர்.

Advertisement

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், “ஆடு திருடும் கும்பல்கள் மீது தயவு தாட்சனம் இன்றி கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். போலீசார் கண்டிப்பு காட்டாவிட்டால் மீண்டும், மீண்டும் ஆடு திருடும் சம்பவம் நடக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகள் பெருமளவு கைக்கொடுக்கின்றன,” என்றார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...