கோவை: கோவையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் இருந்தாலும், மாலை நேரங்களில் குளுகுளுவென காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே மாநகரில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

காந்திபுரம், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே இன்று காலை வாகனங்களை இயக்கினர்.

