கோவை: புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் 13 நாட்கள் சிறப்பு நவ நாட்களுடன் திருவிழா
தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, நேற்று அந்தோணியார் கொடியேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக கூட்டுபாடல் திருப்பலி கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது. பங்கு தந்தை அருள், ஆன்மீக தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்கு தந்தை பால்ராஜ் என மொத்தம் 5 அருட்தந்தைகள் திருப்பலி நிறைவேற்றினர்.

தொடர்ந்து, அந்தோணியார் கொடி பவனி நடைபெற்றது. பின்னர் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.