Header Top Ad
Header Top Ad

சிறுவாணி, பில்லூர் அணைகளின் இன்றைய நிலவரம்

கோவை: சிறுவாணி மற்றும் பில்லூர் அணையில் நீர் இருப்பு நீர் வெளியேற்றும் குறித்த தகவலை நீர்வளத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் தற்போது 41.33 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணையில் 44.61 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் அணைப்பகுதியில் 84 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடியாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Recent News