கோவை: போத்தனூர் ரயில்வே யார்டில் நடைபெற உள்ள பாதை புதுப்பிப்பு பணிகள் காரணமாக கோவை ரயில்கள் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை ரயில்கள்
கீழ்க்காணும் ரயில்கள் குறுகிய இடைவெளியில் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண் 16607- கண்ணூர் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்
பணிகள் நடைபெறும் நாட்கள்: ஜூலை 8, 10, 12ம் தேதிகள்
மாற்றம்: கண்ணூரில் இருந்து பாலக்காடு வரை மட்டுமே ைந்த ரயில் இயக்கப்படும்; பாலக்காடு முதல் கோவை வரை ரயில் ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 16722 – மதுரை – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்
பணிகள் நடைபெறும் நாட்கள்: ஜூலை 8, 10
மாற்றம்: மதுரை முதல் போத்தனூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; போத்தனூர் முதல் கோவை ரயில் நிலையம் வரை ரயில் ரத்து செய்யப்படும்.
ரயில் எண் 66615– மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு
பணிகள் நடைபெறும் நாட்கள்: ஜூலை 8, 10, 12
மாற்றம்: மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை மட்டுமே இயக்கம்; கோவை முதல் போத்தனூர் வரை ரத்து.
கீழ்க்காணும் ரயில்கள் புறப்படும் நிலையில் மாற்றம் செய்யப்படுகிறது
ரயில் எண் 16721– கோயம்புத்தூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
மாற்றம்: இந்த ரயில் ஜூலை 8,10,12 தேதிகளில் கோவையில் இருந்து இயக்கப்படாது. மாறாக பொள்ளாச்சியில் இருந்து மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்ட உள்ளது.

ரயில் எண் 16608 – கோயம்புத்தூர் – கண்ணூர் எக்ஸ்பிரஸ்
மாற்றம்: இந்த ரயில் ஜூலை 8, 10 தேதிகளில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படாமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
ரயில் எண் 66616 – போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு
மாற்றம்: இந்த ரயில் ஜூலை 8, 10, 12 தேதிகளில் போத்தனூரில் இருந்து இயக்கப்படாது. கோவை ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
பயணத்துக்கு முன் பயணிகள் ரயில்வே அதிகாரப்பூர்வ தளங்களில் முழு விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
என்று தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த தகவலை ரயில் பயணிகளுக்கு பகிர்ந்து உதவிடுவீர்