சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலுக்கான தனது சுற்றுப்பயணம் கோவையில் இருந்து தான் தொடங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் மக்களுடன் பயணிப்பவன். மக்கள் ஆதரவுடன் வரும் சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.
Advertisement

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று உள்துறை அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார்.
பா.ஜ.க மற்றும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறியது விஜய்யின் கருத்து. தனித்துப் போட்டியிடுவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சுற்றுப்பயணம்
எனது சுற்றுப்பயணத்தை வரும் 7ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்குகிறேன். அடுத்தடுத்து 234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.
எனது சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
தேர்தலுக்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன். 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க வென்று ஆட்சி அமைக்கும்.
பொய்யே மூலதனம்
மக்கள் விருப்பப்பட்டு ஒரு கட்சியில் உறுப்பினராக இணைவார்கள். ஆனால், தி.மு.க-வின்ர வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கின்றனர். அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பரிதாப நிலையில் உள்ளது என்பதாகப் பார்க்கிறோம்.
கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டனர். பொய்யை மூலதனமாக வைத்தே ஆட்சி அமைத்தார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Z+
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பை Z+ பிரிவு பாதுகாப்பாக மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இ.பி.எஸ் பேட்டி குறித்த தங்கள் கருத்தை, வாசகர்கள் கீழே உள்ள கமென்ட் பாக்சில்ஸ் தெரிவிக்கலாம் 👇
வருங்கால முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
மீண்டும் அரியணை எருவார் தமிழக மக்கள் ஒற்றக் குரலாக நின்று அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழகம் பாதாள சாக்கடையாக மாரி விடும்
அவர் சொல்வது உண்மைதானே.