கோவை: கோவையில் நடைபெற்ற நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சியில் துடும்பாட்ட நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது…
கோவையில் நடைபெற்ற நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சியில் துடும்பாட்ட நிகழ்ச்சிகள் குழந்தைகள் உட்பட பலரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்…
கோவை சுங்கம் பகுதியில் நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சி இரண்டாம் ஆண்டு நடைபெறுகிறது. இதில் தமிழர்களின் பல்வேறு இசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான என்று துடும்பாட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் பல்வேறு கலை குழுவினர் கலந்து கொண்டு துடும்பாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினர். துடும்பாட்ட இசைக்கு ஏற்ப கலைஞர்கள் சிலம்பாட்டம் ஒயில்லாட்டம் ஆடினர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் குழந்தைகளுடன் கண்டு கழித்தனர்.
மேலும் நிமிர்வு கலையகம் சார்பில் பறை வகுப்புகள், துடும்பு வகுப்புகள், செண்டை மேளம் வகுப்புகள், சிலம்பம் அடிமுறை, உட்பட பல்வேறு கலை வகுப்புகள் நடத்தப்படுகிறது.
Comments are closed.