கோவை: மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் விண்ணப்பிக்கும் வகையில் வீடு வீடாக விண்ணப்பம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தது.
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக விண்ணப்பித்த பெண்களில் 1.14 கோடி பெண்களுக்கு மட்டும் தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement

உங்களுடன் ஸ்டாலின்
இத்திட்டத்திற்காக விண்ணப்பித்த மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லை.
இதனிடையே, உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் மூலமாக, மீண்டும் இத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும், வரும் ஜூலை 15ம் தேதி முதல் தகுதி வாய்ந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளன. அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நாளை முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வி நியோகம் செய்யப்பட உள்ளன.
தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், வங்கி பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை மகளிர் உரிமைத்தொகைக்கு காத்திருக்கும் பெண்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
இதுபோன்ற அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். குழுவில் இணைய இங்கே க்ளிக் செய்யவும். 👈