கோவை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ரேஸ்கோர்சில் இன்று காலை வாக்கிங் சென்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நேற்று
வன பத்தரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், இன்று காலை கோவை ரேஸ்கோர்சில் நடைபயணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-25ம் நிதி ஆண்டில் உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க., அரசு கடன் வாங்கி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது அனைத்து அணைகளிலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது அணைகள் புனரமைக்கப்படவில்லை. சிறுவாணி அணியும் அவ்வாறு புனரமைக்கப்படாமல் உள்ளது.தேர்தல் அறிக்கையின் படி நான்கு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக தி.மு.க அரசு வாக்குறுதி அளித்தது.
ஆனால், அவர்கள் நான்கு ஆண்டுகளில் 50,000 பேருக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியின் படி தி.மு.க., அதனை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.