கோவை: கோவை PSG மருத்துவமனையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கால் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்…
கோவை பி எஸ் ஜி மருத்துவமனையில் முதுகலை மயக்கவியல் மருத்துவ மாணவி பவபூரணி கடந்த 6ம் தேதி மருத்துவமனை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இது சம்பந்தமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஷ் ஆகியோர் இன்று மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவமனை நிர்வாகிகள், சம்பவம் நடந்த போது இருந்த மருத்துவர்கள், இதர மாணவிகள் கோவை அரசு மருத்துவமனை முதல்வர், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பெற்றோர் உறவினர்களிடமும் அவர்களது கோரிக்கைகள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
விசாரணையில் கிடைக்கபெற்ற கருத்துக்களை அறிக்கையாக நீதி அரசரிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.