Kovai Kutralam: தடை நீக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிறான இன்று கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடி உற்சாகம்
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் கடந்த மே 23 ஆம் தேதி மூடப்பட்டது. மழைப் பொழிவு குறைந்ததாலும், அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதாலும், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்தனர்.

இவர்கள் வனத்துறையின் தனி வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றலம் வந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளும் இங்கு வந்து சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர்.