கோவையில் வீட்டில் விபசாரம்; புரோக்கர் கைது

கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் தூத்துக்குடியை சேர்ந்த அருள்பாண்டியன் (32) என்பதும், அவர் எஸ்ஐஎச்எஸ் காலனி காவேரி நகர் 5வது வீதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அருள்பாண்டியன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...