கோவை: சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கரைபுரண்டு ஓடிவரும் நொய்யலின் அழகை ரசிக்க பலரும் சிறுவாணி பிரதான சாலையில் உள்ள சித்திரைச்சாவடி அணைக்குச் சென்று வருகின்றனர்.
கோவை குற்றாலம் செல்லும் பொதுமக்கள் பலரும் இந்த தடுப்பணையைப் பார்த்துச் செல்கின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த கார்த்திக் (வயது 28) என்ற இளைஞர் தனது நண்பர்கள் மூவருடன் சித்திரைச்சாவடி தடுப்பணைக்குச் சென்றார்.
அங்கு நண்பர்களுடன் குளித்த போது கார்த்திக் ஆழ்மான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கார்த்திக் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரைச்சாவடி அணையில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.