கோவை: கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 33 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையில் தெற்கு பகுதி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சென்னை அண்ணா நகர் பகுதி உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக கோவை தெற்கு பகுதியின் காவல் துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கார்த்திகேயன் தற்போது சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவின், காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
அடுத்த ஒரு சில தினங்களில் இவர் கோவை மாநகர காவல் துணை ஆணையராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.