Header Top Ad
Header Top Ad

பல்லடம் தேசிய புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு- கோவை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கோவை: பல்லடம் தேசிய புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து வருவாய் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் NH-81 பல்லடம் புறவழிச் சாலை திட்டம் பல்லடம் வட்டத்திற்கு உட்பட்ட செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பல்லடம், நாரணாபுரம், மதப்பூர் ஆகிய ஐந்து வருவாய் கிராமங்கள் வழியாக 1.8கிமீ தூரத்திற்கு புதிதாக செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தற்பொழுது துவங்கியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாதைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

அந்தத் திட்டமானது ஐந்து வருவாய் கிராமங்கள், பல்லடம் நகர் பகுதியில் வருவதால் அங்குள்ள விவசாய நிலங்கள், நீர் கிணறுகள் கோழிப்பண்ணைகள் கடைகள் நிறுவனங்கள் வீடுகள் ஆகியவற்றை இழக்க நேரிடும் என்றும் எனவே அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதே சமயம் திட்டத்தை 2021ல் மாநில நெடுஞ்சாலைத்துறையால் அளவீடு செய்து முடிந்த பகுதியின் வழியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே நெடுஞ்சாலைத்துறை அலுவலர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம் என்று கூறினார். அப்போது சில பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் சில விவசாயிகள் எங்கள் உயிரை கொடுத்தாவது இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆவேசம் கொண்டனர்.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த பொதுமக்கள், 70 மீட்டர் அகலத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் எங்களுடைய வீடு நிலங்கள் சிறுகுறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இந்தத் திட்டத்தை ஊருக்கு வெளியில் 5 கிலோ மீட்டர் கடந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அனைவருக்கும் பயன்படும் எனவும் கூறினர்.

இந்த திட்டம் இவ்வழியாகவே செயல்படுத்தப்பட்டால் 36 கிணறுகள், 8 கோழி பண்ணைகள், விவசாயம், தொழில் நிறுவனங்கள் கோவில்கள், சுடுகாடு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

மக்கள் எதிர்ப்பு இருந்தால் இந்த செயல்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் இந்த அரசு மாறினாலும் அதிகாரிகள் மாறினாலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எங்கள் எதிர்ப்பு போராட்டங்களை தாண்டியும் எங்கள் உயிரை எடுத்தும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்தனர்.

Recent News