கோவை: கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரிவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி மாதம் இந்து மதத்தில் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.
கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன் நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 29 ஆம் தேதி துவங்கி வருகிற 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் திருவுருவத்தை 10,008 வெள்ளி கண் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதில் மற்றொரு சிறப்பாக, அம்மனின் உருவப்படத்தில் உள்ள கண் வழியாக பார்க்கும் போது, கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனின் சிலை அருகில் தெரிவது போல் பைனாகுலர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடனும், பார்த்து தரிசித்து சென்றனர்.