கோவை: வெந்நீர் வைத்த போது கேஸ் அடுப்பு வெடித்து மூதாட்டி பலியான சோகம். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்எஸ் புரத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்க மறந்துள்ளார். இதனால் கேஸ் அடுப்பு வெடித்து மாரியம்மாள் படுகாயம் அடைந்தார்.
அந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த லீலா என்பவர் மாரியம்மாளின் மகன் மனோகர் என்பவருக்கு போன் செய்து வீட்டில் இருந்து ஏதோ பயங்கர சத்தம் வந்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு மாரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு அவர்கள் மாரியம்மாள் படுகாயம் அடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆர்எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
வெந்நீர் வைத்த போது அடுப்பு வெடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
                                    
