கோவை மாநகர போலீசில் 125 பேர் புதிதாக சேர்ப்பு!

கோவை: பயிற்சி நிறைவு செய்த 125 பேர் போலீசார் கோவை மாநகர போலீசில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பயிற்சி காவலர்களுக்கு 7 மாதங்கள் போலீஸ் பயிற்சி பள்ளியில் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

ஆயுதப் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, கலவர தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் முடிவடைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியிலிருந்து பல்வேறு மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அவ்வாறு பயிற்சி நிறைவு செய்த 125 பேர் கோவை மாநகர ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கோவை வந்து பணியில் சேர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

Advertisement

பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த போலீசார் பிரித்து அனுப்பப்படுவார்கள். அவ்வாறு வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 125 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை மாநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆயுதப்படையில் இருந்து மாநகர பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

TVK வெற்றியை கொண்டாடிய கோவை வழக்கறிஞர்கள்…

கோவை: தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில் 108 தொகுதிகளில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...