Header Top Ad
Header Top Ad

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடி குண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

நாட்டின் 79வது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் இணைந்து தீவிர  சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையத்தில் வெடி குண்டு கண்டறியும் 
நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளுடன் பயணிகளின் உடைமைகள் மற்றும் நடைமேடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளங்களிலும் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ள சரக்குகள் ஆகியவற்றை முழுமையான  சோதனைக்கு உட்படுத்திய வெடிகுண்டு சோதனை  நிபுணர்கள் தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தை ஒட்டி கூடுதலாக ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினம் வரையில் தீவிர சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Recent News