கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சார்ஜா விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று காலை வந்தது. வழக்கம் போல் விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது அந்த விமானத்தில் வந்த திருவாரூரை சேர்ந்த அப்துல் ரஹீம், தூத்துக்குடியைச் சேர்ந்த சையத்சிராஜ்தீன், சிவகங்கைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன், திருச்சி சேர்ந்த முகமது சித்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த முகமது அப்சல் ஆகியோர் கொண்டு பைகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 856 தையல் சிகரெட், DJI AIR 3S DRONE-10, மைக்ரோ ஃபோன்-36 ஆகியவற்றை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 37.09 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.