கோவை: கோவை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கான நேரடி சேர்க்கையானது 2025ஆம் ஆண்டிற்கான ஐ.டி.ஐ முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை முடிவடைந்த நிலையில், நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தொழிற்பயிற்சி
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் FITTER, FITTER (DST), TURNER, TURNER (DST), MACHINIST, MACHINIST(DST), ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, TECHNICIAN MECHATRONICS, INTERIOR DESIGN AND DECORATION மற்றும் REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) போன்ற பல்வேறு பிரிவுகளில் ( ஆண் – பெண் ) இருபாலருக்கும் ஆறுமாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும், TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, மற்றும்MANUFACTURING PROCESS CONTROL & AUTOMATION முதலிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்திட 31ம் தேதி வரை சேர்க்கை நடைபெறவுள்ளது.
மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்பதால் இந்த அரிய வாய்ப்பினை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், NIMI புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதி மாதம் ரூ.750/- வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட /தாழ்த்தப்பட்ட வகுப்பு /பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி (தகுதியின் அடிப்படையில்) வழங்கப்படும்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
வயது வரம்பு14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை) இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தனியார்த்துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த மேலும், விபரங்களுக்கு 8825434331, 9123524155, 7904271022, 7373278939 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள செய்தியை மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே