விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வந்த மின்சாதன பொருட்கள் பறிமுதல்…

கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சார்ஜா விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று காலை வந்தது. வழக்கம் போல் விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது அந்த விமானத்தில் வந்த திருவாரூரை சேர்ந்த அப்துல் ரஹீம், தூத்துக்குடியைச் சேர்ந்த சையத்சிராஜ்தீன், சிவகங்கைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன், திருச்சி சேர்ந்த முகமது சித்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த முகமது அப்சல் ஆகியோர் கொண்டு பைகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்தனர்.

Advertisement

அப்போது அதில் 856 தையல் சிகரெட், DJI AIR 3S DRONE-10, மைக்ரோ ஃபோன்-36 ஆகியவற்றை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 37.09 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு…

கோவை: வாக்கு எண்ணிக்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கட்சியினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பவன்குமார்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...