Ungaludan Stalin Camp Coimbatore கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Ungaludan Stalin Camp Coimbatore: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இன்று (22.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டுக்கு சுந்தரபுரத்தில் உள்ள செண்பககோனார் மண்டபத்திலும்,

மத்திய மண்டலத்தில் 48, 49வது வார்டுகளுக்கு நியூ சித்தாபுதூரில் உள்ள கோயம்புத்தூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க சமுதாய கூடத்திலும்,

பொள்ளாச்சி நகராட்சியில் 12,19,26 ஆகிய வார்டுகளுக்கு அன்னை மஹாலிலும், சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 1,2,3,6,7,8,9,10 ஆகிய வார்டுகளுக்கு ஸ்ரீவிக்னேஸ்வரா கல்யாண மண்டபத்திலும்,

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு காட்டம்பட்டி சமுதாய கூடத்திலும்,

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலங்கல், பீடம்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு ஜெயம் ஹாலிலும், என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டால்லின் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp