யானைகள் இறப்பிற்கு மனிதர்கள் தான் காரணம்- வன ஆராய்ச்சியாளர் கூறிய தகவல்கள்

கோவை: யானைகள் இறப்பிற்கு மனிதர்கள் தான் காரணம் என வன ஆராய்ச்சியாளர் நவீன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள வன உயிர் பயிற்சியக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் சார்பில் யானைகள் பாதுகாப்பு, யானைகள் மனித மோதல் தடுப்பு குறித்தான புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் யானைகள் இருப்பு, பாதுகாப்பிற்காக இந்த மையம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தை இம்மையத்தின் வன ஆட்சியாளர் நவீன் வெளியிட வனத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து பேட்டி அளித்த வன ஆராய்ச்சியாளர் நவீன், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வாறு முரண்பாடு ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு வருட கால ஆய்வில் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த புத்தகத்தில் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி 3 வருடத்திற்கும் தொடரும் எனவும் ஆய்வுகள் முடியும் பொழுது இதற்கான தீர்வுகள் கிடைக்கும் என்றும் கூறினார்.

Advertisement

யானைகள் எம்மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன பொதுமக்களிடம் எந்த அளவு ஒத்துழைப்பு இருக்கின்றது யானை மனித முரண்பாடுகளை எவ்வாறு களையலாம் என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகம் மூன்று வருட ஆய்வுகள் முடிவில் கிடைக்கக்கூடிய புள்ளி விவரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்பொழுது வரை எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மூன்றாயிரம் யானைகள் இருப்பதாகவும், அதில் பாலக்காடு முதல் கிருஷ்ணகிரி வரை 2000 யானைகள் இருப்பதாகவும் கன்னியாகுமரி முதல் ஆனைமலை வரை சுமார் ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் யானைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

யானை மனித மோதலை தடுப்பதற்கு பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ட்ரோன் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள், AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

வனப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் தவறுகளை மனிதர்கள் தான் செய்வதாகவும், இந்த தவறுகள் மனிதர்கள் தான் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் யானைகளை குறை சொல்லக்கூடாது எனவும் குறிப்பிட்டார். நிலம் யானைகள் மனிதர்களுடன் வாழ்வதற்கு பழகிக் கொண்டு விட்டதாகவும் யானைகள் மட்டுமல்லாமல் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் மனிதர்களுடன் வாழ பழகி விட்டதாக தெரிவித்தார்.

எந்த காரணத்திற்காகவும் யானைகள் மனிதர்களை தாக்க வேண்டும் என்பதற்காக வனத்திலிருந்து வெளியேறுவதில்லை என குறிப்பிட்ட அவர் அது தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தான் வரும் என தெரிவித்தார். யானை நாம் செய்த தவறுகளால் தான் இறக்கின்றதே தவிர யானை மீது தவறு என்று குறிப்பிட முடியாது என தெரிவித்தார்.

10 வருடத்திற்கு முன்பு யானைகள் சென்ற பாதைகள் எல்லாம் தற்பொழுது விவசாயம் குறைந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு நடைபெறும் பொழுது தான் யானைகளுக்கு Stress உண்டாவதாகவும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்தார்.

யானைகள் செல்வதற்கான பாதைகளை நாம் உருவாக்கி வைத்தாலே முரண்பாடுகளை களையலாம் என்றும் அதற்கான ஆராய்ச்சிகள் தான் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் கூட யானைகளுக்கு விஷமாக மாறி விடுவதாகவும் இதுவும் யானைகளின் உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக அமைவதாக தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கைவினை கலைஞர்களுக்கு மானியம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: கைவினை கலைஞர் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கைவினை...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.