கோவை: கோவையில் செயல்பட்டு வந்த ‘லிங்க் 2 லிங்க்’ என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரில், போலீசார் நிறுவனத்தின் இயக்குனர் சுதாகர் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடையவரகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.