கோவை: காரமடையில் சாலையில் சென்ற KIA கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் காரமடை காந்தி சிலை பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இன்று காலை கோவை செல்வதற்காக தனது கியா காரில் புறப்பட்டு காரமடை ரயில்வே மேம்பாலத்தில் சென்றார்.
அப்போது அவரது காரில் சக்கரங்கள் அதிக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அதனை பார்ப்பதற்காக காரை விட்டு இறங்கிப் பார்த்தார்.
அப்போது திடீரென கார் தீ பற்றி எரியத் தொடங்கியது. சுதாரிப்பதற்குள் தீ மளவளவென கார் முழுக்க பரவியது.
இது குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
அவர்கள் வருவதற்குள்ளாக பொதுமக்களும் போராடி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அதற்குள் கார் முழுவதும் தீக்கிரையானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.