கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக (30.08.2025) அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், 29 வது வார்டுக்கு கணபதியில் உள்ள பட்டியப்பா கல்யாணமண்டபத்திலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 10,11,12 ஆகிய வார்டுகளுக்கு சி.எஸ்.ஐ எஸ்டி ஜான்ஸ் சர்ச் பாரீஸ் ஹாலிலும்,
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அர்த்தநாரிபாளையம், ஜல்லிபட்டி, கம்பாலாபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு கம்பாலாபட்டியில் உள்ள கமலம் மஹாலிலும்,
மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர், மாவுதம்பதி ஊராட்சிகளுக்கு மாவுத்தம்பதியில் உள்ள மஹாலெட்சுமி மஹாலிலும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், எஸ்.நல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தொண்டாமுத்தூர் ஆனந்தம் மஹாலிலும்,
சின்னியம்பாளையம் புற நகர் பகுதிக்கு பிருந்தவன் ஆடிட்டோரியத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்