Header Top Ad
Header Top Ad

யோகாவின் சக்தியால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகும் இது சாத்தியமானது- ஈஷா நிறுவனர் வாசுதேவ்…

கோவை: யோகாவின் சக்தியால் அறுவை சிகிச்சை செய்த போதும் மோட்டார் சைக்கிளில் கைலாசா சென்று தரிசனம் மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பினேன் என ஈஷா நிறுவனர் வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் வாசுதேவ் தலையில் அறுவை சிகிச்சை செய்த பிறகும் மோட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கைலாசம் சென்று நேற்று கோவை திரும்பினார்.

கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க 300 நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள், ஆதரவாளர்கள் பாடல் பாடி வரவேற்றனர்.
பின்னர் பக்தர்களுக்கு கைலாச தீர்த்தமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வருடம் இரண்டு முன்பு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவுன் மோட்டர் சைக்கிள் ஓட்ட கூடாது என மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள் என்றார்.

ஆனால் எப்படியாவது மோட்டர் சைக்கிளில் கைலாஷ் போக வேண்டும் என நினைத்து யோகா சக்தியை நம்பி நான் மீண்டும் மோட்டர் சைக்கில் பயணித்தேன். யோகா என்னிடம் இருப்பதால் நான் மோட்டர் சைக்கிளில் பயணிக்க முடிவு செய்து பயணித்தேன் என்றார். மருத்துவர்கள் அது முடியாது என்றார்கள் ஆனால் வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்து உள்ளேன் என்றார்.

என்னுடைய அனுபவத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் பயணித்து வந்துள்ளேன்.
அமெரிக்காவின் வரி உயர்வு கண்டிப்பாக பாதிப்பு உள்ளது. நம்முடைய நாட்டிற்கு ஒரு மரியாதை உள்ளது. பாதிப்பை சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார். சவால் வந்தால் அதை சாதிக்கும் எண்ணங்கள் வேண்டும் என்றார். மக்கள் உறுதியாக ஒரே சக்தியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது புதிதல்ல என்று எம்ஜிஆர்,ஜெயலலிதாவை சுட்டிக்காட்டினார் . சினிமாவிற்கு தமிழ்நாட்டிற்கு தொடர்பு உள்ளது. மக்களுடை விருப்பம். என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்றார்.
2026 தேர்தல் மக்கள் விரும்புவது நடக்கும் என்றார்.

இளைஞர்கள் மனதில் கணபதி வேண்டும். கோவில்களில் மட்டுமல்ல மனதிலும் வேண்டும் என்றார். மனதில் அன்பு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.

Recent News