மீண்டும் வருகிறது அந்த 7 நாட்கள் திரைப்படம்!

கோவை: தமிழ் திரையுலகில் புதிய படமாக “அந்த 7 நாட்கள்” வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.

பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் “அந்த 7 நாட்கள்”. இப்படம் கடந்த 1981ல் வெளியாகி வெற்றிநடை போட்டது.

Advertisement

இதனிடையே, தற்போது “அந்த 7 நாட்கள்” என்ற அதே தலைப்பில், பாக்யராஜ் மீண்டும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

ரொமான்ஸ் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து உருவாகியுள்ள இப்படத்தை எம். சுந்தர் எழுதி இயக்கியுள்ளார். முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இந்த படம், தரமான ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சச்சின் சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜிதேஜ், ஸ்ரீசுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ரசிகர்களை கவரும் வகையில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கதைக்கு ஆழத்தை சேர்க்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

கோபிநாத் துரை ஒளிப்பதிவில், முத்துமிலன் ராமு எடிட்டிங் மற்றும் VFX பணிகளை செய்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் காதலும், அதிரடி திருப்பங்களும், ரொமான்டிக் திரில்லர் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதால், ரசிகர்களை கவரும் என்றும், சச்சின் சுந்தர் காதலையும், சஸ்பென்ஸையும் பிரதிபலிக்கும் இசையமைத்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள், டீசர்கள், பின்னணி காட்சிகள் ஆகியவை வெளியீட்டுக்குத் தயாராகிக் வருகின்றன.

Recent News

மீண்டும் ஜெய்லர் 2 ஷூட்டிங்: கோவை வந்தார் ரஜினி; கேள்விக்கு No Comments…!

கோவை: ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி கோவை வந்தார்.ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கோவை வந்த ரஜினிகாந்த் 20 நாட்கள்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...