கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கடந்த 10 நாட்களுக்கு முன்பு துவங்கியது. அதன் முக்கிய நிகழ்வான இன்று அனைவரும் ஐயப்பன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தொடர்ந்து இல்லங்களில் பல்வேறு உணவுகளை படையலிட்டு கொண்டாடுவர்.

அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடினர்.
பலரும் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை புரிந்து சரணம் என்ற கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சன்னதியில் சுற்றி சாமி ஊர்வலம் நடைபெற்றது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.