ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். ஆனால்… கோவை திரும்பிய செங்கோட்டையன் பேட்டி!

கோவை: ஹரித்வார் செல்வதாகக் கூறிவிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு வந்ததாக கோவை திரும்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

Advertisement

நேற்று நான் ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டு டில்லி சென்றேன். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் அனுமதி கிடைத்தது.

அப்போது அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்த கருத்துகள் பரிமாறப்பட்டன. எனது கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.

Advertisement

அதன் பேரில் தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன. அரசியலில் இருப்பவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவிக்க ஜனநாயக உரிமை உள்ளது. அவரவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று.

நேற்று அமைச்சர்களை சந்திக்கும் போது மத்திய ரயில்வே அமைச்சரும் அங்கு வந்தார். அவரிடம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டு என்று கூறினேன். இதுகுறித்த விவரங்களை அவர் கோரியுள்ளார். மக்கள் ஒத்துழைப்புடன் பணிகளை ஆற்றுவேன். என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியபோது அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

AI தொழில்நுட்பம் நிலையானது அல்ல- கோவையில் நம்பி நாராயணன் கூறிய தகவல்…

கோவை: AI தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது என்றும் அதே சமயம் அதை நிலையானது அல்ல என்றும் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp