Header Top Ad
Header Top Ad

சரவணம்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சரவணம்பட்டியில் முகாம் நடைபெற்றது.

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் கோவையில் முகாம்கள் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 11 மற்றும் 21க்கு உட்பட்ட மக்கள் பயனடையும் வகையில், இந்த முகாம் செப்டம்பர் 9ம் தேதி சரவணம்பட்டி சத்தி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் நிலையத்தில் நடைபெற்றது.

வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் பழனிசாமி (எ) சிறைவி சிவா, உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முகாமில் கலந்துகொண்டனர்.

Advertisement

மேலும், கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு உடனடி ஆணையை வழங்கினர்.

Recent News