டிராபிக் தாத்தா மறைவு- போக்குவரத்து காவலர்கள் அஞ்சலி

கோவை: டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவையை சேர்ந்த 88 வயதான சமூக ஆர்வலர் சுல்தான் மக்கள் பலராலும் அன்புடன் டிராபிக் தாத்தா என அழைக்கப்பட்டு வந்தார்.

Advertisement

வயதான போதிலும் உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் எற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இன்று அவரது உடல் துடியலூர் அடக்கஸ்தளத்தில் அடக்கம்
செய்யப்பட உள்ள நிலையில் போக்குவரத்து காவலர்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர் மாலை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது மறைவு அப்பகுதி மக்கள், போக்குவரத்து காவலர்கள் பலரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group