கோவையில் தொடங்கியது UPSC தேர்வு!

Coimbatore: கோவையில் நான்கு மையங்களில் UPSC தேர்வு நடைபெறும் நிலையில் தாமதமாக வந்த தேர்வுகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்.

Advertisement

மத்திய தேர்வாணையத்தின் UPSC ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

கோவையில் 4 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத மாவட்டத்தில் மொத்தம் 1,535 பேர் தேர்வு விண்ணப்பித்துள்ளனர்.

கோவையில் அவிநாசிலிங்கம் கல்லூரி வளாகத்திளேயே இரண்டு தேர்வு மையங்களும், ஆர்எஸ் புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, PSG கல்லூரி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.

இந்த மையங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பாளர் அலுவலர்களும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

8:30 மணிக்கு வாயிற்கதவு பூட்டப்பட்டதால் அதனையடுத்து வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் பலர் தேர்வெழுதாமல் திரும்பி சென்றனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp