கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர் 18ம் தேதி) நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக 18ம் தேதி கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 93வது வார்டுக்கு குனியமுத்தூரில் உள்ள பிரவீன் கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 26,33வது வார்டுகளுக்கு இ.எம்.எஸ் திருமண மண்டபத்திலும்,
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலப்பாளையம், வெள்ளியங்காடு ஊராட்சிகளுக்கு வெள்ளியங்காடு சமுதாய கூடத்திலும்,
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அய்யம்பாளையம், நல்லுத்துக்குளி ஆகிய ஊராட்சிகளுக்கு ஜலத்தூர் பிரிவில் உள்ள துளசியம்மாள் ராமசாமி கவுண்டர் திருமண மண்டபத்திலும்,
எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.எஸ்.குளத்திற்கு சாமநாயக்கன்பாளையத்திலுள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.