நிலவில் மாதிரிகளை சேகரிக்க AI தொழில்நுட்பம்- கோவையில் இஸ்ரோ தலைவர் பேட்டி

கோவை: சந்திரயான் 4 திட்டத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் என்று கூறினார்.

Advertisement

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம் டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும் என்றார்.
இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளதாகவும்
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம் என்றார்.

ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது என்றும் மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

மேலும் இது ஐஎஸ்ஆர்ஓ மட்டுமல்லாமல் ஏரோ, NAVY உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள் என்றார்.

உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்றும் நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நம் நாட்டினுடையது தான், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியா தான்
ராக்கெட் இன்ஜினியிலும் சாதனைகளை படைத்துள்ளோம் என்றார். மேலும் நம் நாட்டில் 55 சதவிகிதம் பாமர மக்களின் விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது என கூறிய அவர் மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர் என்றார்

AI தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது என தெரிவித்த அவர், வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜி தான் சந்திரயான் 4 நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் AI ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்றார்.

Recent News

இண்டிகோ விமானங்கள் ரத்து- கோவையில் பயணிகளுக்கு கட்டணத்தொகை Refund…

கோவை: கோவையில் இண்டிகோ விமானம் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பயணிகள் புக்கிங் செய்த கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாகவே நாடு...

Video

Join WhatsApp