கோவை: கோவையில் ஓசி பஸ்சில் போங்க என்று பெண்களை திட்டிய ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து துடியலூர் செல்லும் 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர்கள் ஏறியுள்ளனர்.
அப்போது, அந்த பேருந்தின் ஓட்டினர், “உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்க” என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் கடும் கோபமடைந்த பெண் தூய்மை பணியாளர்கள், “நாங்கள் காசு குடுத்து டிக்கெட் எடுக்கிறோம் தானே எங்களை ஏன் அப்படி சொன்னாய்? என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவருக்கு ஆதரவாக பேசிய நடத்துடனரையும் வெளுத்து வாங்கினர். இதனை பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோ எடுத்தார்.
இதுகுறித்த செய்தியை ஏற்கனவே நியுஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் பதிவு செய்தது.
சம்பவத்தின் வீடியோ காட்சிகள்:
மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே அன்னூர் பஸ் டிப்போவில் பணியாற்றும் அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.