கோவை: மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை கோவையில் நடைபெற்றது.
Vogue Modeling நிறுவனம் சார்பில் கோவை காந்திபுரம் சாய் பிரசாத் ஸ்டுடியோவில் மாடலிங் பயிற்சிப்பட்டறை செப்., 28ம் தேதி நடைபெற்றது.
நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சில்பா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிப்பட்டறை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில், மாடலிங் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த பயிற்சியில், மாடலிங் போட்டோஷூட்டிற்கு ஏற்ற உடைகள் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு நடைபோட வேண்டும், போட்டோகிராஃபி திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ப்ரேம் அமைப்பது எப்படி, சமூக வலைதளங்களில் தங்களை எவ்வாறு விளம்பரம் செய்வது, எவ்வாறு போஸ்கள் வழங்க வேண்டும் போன்றவை குறித்து நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த பயிற்சியில், கோவை, திருச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 18 ஆண்களும், 12 பெண்களும் பங்கேற்றனர்.

பயிற்சியாளர்கள்:
Imran Khan – Cinematography
Shruthika – Modeling- Costume
Shilpah Seetharaman Nair – Choreo Session
Pavithra – Pose Techniques
Salmon Javahar – Social Media Promotions
அடுத்த கட்ட பணிமனைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சியில் நீங்களும் கலந்து கொள்ள அழைக்கலாம்: 9677890630